தமிழ் பிக்பாஸுற்கு குரல் கொடுத்தவர் இவர் தானா? அடித்து சொல்லும் ரசிகர்கள்; வைரல் வீடியோ!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது கடந்த நாட்களுக்கு முன்பு நிறைவடைந்து ஆரி டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றார். இதனிடையே, வெளியே வந்த போட்டியாளர்கள் உற்சாகத்துடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸுற்கு உண்மையான குரல் யார் என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்தாலும், ஏற்கனவே ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இவர் தான் அவர் என கசியவிட்டனர்.
ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி பிக்பாஸுற்கு குரல் கொடுத்தது இவர் தான் என நடிகர் சச்சிதானந்தம் என்கிற சாஷோ பேசும் வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. ஏற்கனவே சிலர் இவர் தான் பிக்பாஸ் என்று சந்தேகம் கூட தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பிக்பாஸின் குரலை அச்சு அசல் அப்படியே ஒத்து இருக்கும் அவரது இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இவர்தான் நிச்சயம் தமிழ் பிக்பாஸ் என்று கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், இவர் பிக்பாஸ் கொண்டாட்டத்திலும் கலந்துகொண்டதாக தகவல் உலாவருகிறது.