Bigg Boss 9: விஜய் சேதுபதி போட்ட முதல் குறும்படம்... பேரதிர்ச்சியில் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி இரண்டு வருடமாக தொகுத்து வழங்கும் நிலையில், தற்போது முதல் குறும்படத்தை வெளியிட உள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. சனி மற்றும் ஞாயிறு நாட்களில் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிகழ்ச்சிக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றது. ஆனாலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களையும் கடுமையாக பேசியுள்ளார்.

முதல் ப்ரொமோவில் ஒருவருக்கு வர வேண்டிய பாராட்டினை மற்றவர்கள் தட்டிப்பறித்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு போட்டியாளர்கள் தங்களது விவாதத்தினை வைத்துள்ளனர்.
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் அரோராவினை கடுமையாக பேசி இப்போதே வெளியே செல்ல வேண்டும் என்றால் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மூன்றாவது ப்ரொமோ காட்சியில் திவாகரை பயங்கரமாக பேசி மூக்கை உடைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காததால் அவரே கடுப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
நான்காவது ப்ரொமோ காட்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இரண்டு ஆண்டுகளில் தற்போது முதல் குறும்படத்தினை வெளியிட உள்ளார். குறித்த குறும்படத்தினை அவதானிக்க ரசிகர்களும், போட்டியாளர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |