பிக்பாஸ் சீசன் 7வ் எதிர்பாராத டுவிஸ்ட்.... இரண்டாக பிரியும் வீடு
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7ல் இரண்டு வீடுகள் இருக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவிக்களில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்படுகின்றது. அவ்வாறான நிகழ்ச்சி ஒன்று தான் குக் வித் கோமாளி. இவை சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் ஆரம்பமாக உள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் 7வது சீசன் ஆரம்பமாக உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் இந்த சீசனுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளதால் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் செட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல எதிர்பாராத டுவிஸ்ட் நடைபெற உள்ளதாம். அதாவது ஒரு பிக்பாஸ் வீடு இருந்த நிலையில், தற்போது இரண்டு பிக்பாஸ் வீடுகள் வரவிருப்பதாகவும், சில வாரங்கள் கழித்து இரண்டு வீட்டிலும் உள்ள போட்டியாளர்களை ஒரே வீட்டில் சேர்த்துவிட்டு, இவர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இதுவரை எந்த மொழியிலும் இதுபோன்று இல்லாமல் உள்ள நிலையில், பிக்பாஸ் குழுவின் இந்த புதிய முயற்சி உண்மை தானா? இவை கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |