பிக்பாஸில் திவாகர் வாங்கிய சம்பளம் எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸிலிருந்து வெளியேறிய திவாகர் மற்றும் கனி இருவரும் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 5ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 20 பேர் கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்களாக நான்கு பிரபலங்கள் உள்ளே சென்றுள்ளனர். இதுவரை 6 பேர் வெளியேறியுள்ள நிலையில் வரும் வார தலைவராக எப்ஃஜே தெரிவாகியுள்ளார்.
இன்று வெளியான மூன்றாவது ப்ரொமோ காட்சியில் விஜய் சேதுபதியிடம் முத்தத்தை பெற்றுக்கொண்டு திவாகர் வெளியேறுகின்றார்.
ஆதலால் திவாகர் வெளியேறுவது உறுதியாகியுள்ள நிலையில் கனியும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் வாங்கிய சம்பளமாக பெற்ற தொகையை விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

திவாகர் மற்றும் கனி
திவாகர் மற்றும் கனி இருவரும் 40 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், திவாகருக்கு நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போன்று கனிக்கு நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |