Bigg Boss 9: இதுவரை பிக்பாஸில் 6 பேர் இறந்திருப்பாங்களா? கொட்டித் தீர்த்த வினோத்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் திவாகர் மற்றும் வினோத்தின் சண்டை குறித்து விஜய் சேதுபதி விசாரித்துள்ள நிலையில், இதில் வினோத் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 5ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. 20 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் நந்தினி தனது உடல்நிலை பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில், பிரவீன் காந்தி மக்களால் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நபர் எலிமினேஷன் நடைபெற உள்ளது. இதில் அப்சரா வீட்டிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. அதாவது திவாகர் வினோத் இடையே நடைபெறும் நிகழ்வுகளைக் குறித்து விஜய் சேதுபதி விவாதித்துள்ளார்.
இதனால் கொந்தளித்த வினோத் பிக்பாஸில் கிணறு மட்டும் இருந்திருந்தால் இதுவரை 6 பேர் இறந்திருப்பார்கள் என்று ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |