Bigg Boss 9: எனக்கு நீங்க சொல்லித்தர வேண்டாம்... பிக்பாஸில் கொந்தளித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி கோபத்தில் பயங்கரமாக கொந்தளித்த காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 9
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடிவருகின்றனர்.
நந்தினி தானாக வெளியேறிய நிலையில், இயக்குனர் பிரவீன்காந்தி முதல் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சிலர் காதல் வலையில் வீழ்ந்துள்ளனர்.
இவர்கள் செய்யும் சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதனால் கடும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றது.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி கம்ருதினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு கம்ருதின் கொடுத்த பதில் விஜய் சேதுபதியை பயங்கர கோபத்தில் ஆழ்த்தியதால், எனக்கு நீங்க சொல்லித்தர வேண்டாம் என்றும் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |