Bigg Boss: ஆரம்பமாகியது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்... முதல் டாஸ்கில் வெற்றி பெற்றது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஆரம்பமாகிய நிலையில், இதில் சுபிக்ஷா வெற்றி பெற்றுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதுவரை போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களும் எதிர்பார்த்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகின்றது.

இதில் முதல் டாஸ்க்கை இன்று பிக்பாஸ் கொடுத்துள்ளார். மிகவும் கடினமான இந்த போட்டியில் சுபிக்ஷா தனது முழு முயற்சியினையும் செலுத்தியுள்ளார்.
இறுதியாக அவரே வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சுபிக்ஷாவிற்கு பிக்பாஸ் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் வெளியே பிஆர் டீம் வைத்து தனக்காக வாக்கு சேகரிக்கும் போட்டியாளர்கள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இதில் கானா வினோத் தனக்கு பிஆர் - என்றால் என்னவென்றே தனக்கு தெரியாது. வாடகைக்கே காசு இல்லாமல் தான் நான் இங்கு வந்திருக்கேன் என்று உண்மையைக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
அடுத்த ப்ரொமோ காட்சியில் பாரு கம்ருதின் மோதல் அதிகமாகியுள்ளது. இதில் பாரு கதறி அழுது சீன் போட்ட நிலையில், கம்ருதின் கோபத்தில் பயங்கரமாக சத்தம் போட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |