பிக்பாஸிருந்து எவிக்டான கனி, அமித் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
பிக்பாஸ் வீட்டில் கடந்த நாட்களில் வெளியேறிய கனி மற்றும் அமித் இருவரும் வாங்கிய சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் 11 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் கம்ருதின் தவிர 10 பேர் நாமினேஷனில் இருந்தனர்.
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதில் சனிக்கிழமை அமித் வெளியேற்றப்பட்டார். அமித்தின் வெளியேற்றம் நியாயம் இல்லாதது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஞாயிற்று கிழமை கனி வெளியேற்றப்பட்டார். உள்ளே இருந்த போட்டியாளர்கள் கனி தான் உள்ளே இருப்பார் என்று அனைவரும் கூறிய நிலையில், மக்களின் தீர்ப்பு கனி என்று விஜய் சேதுபதி எவிக்ஷன் கார்டை காட்டியுள்ளார்.
சக போட்டியாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில் பார்வதி மட்டும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். ஏனெனில் பார்வதிக்கு சாண்ட்ரா உள்ளே இருக்க வேண்டும் என்று தான் இருந்தது.

சம்பளம் எவ்வளவு?
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் முதலில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளரான அமித் 28வது நாளில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். இவர் நாள் ஒன்றிற்கு 15 முதல் 20 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

கிட்டத்தட்ட 60 நாட்கள் இருந்த இவர் 12 லட்சம் சம்பளமாக வாங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுவே கனி திரு முதல் நாளிலிருந்து பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 17 வாரங்கள் இருந்துள்ளார். இவர் வாரத்தில் 1.2 முதல் 2 லட்சம் வரை சம்பளமாக வாங்கியிருப்பார் என்று கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |