12 ஆண்டுக்கு பின்பு வரும் குருபெயர்ச்சி... இரட்டிப்பான நன்மையினை பெறும் ராசியினர் யார்?
குரு பகவானின் ராசி மற்றும ்நட்சத்திர பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு இரட்டிப்பான நன்மையை அளிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு பெயர்ச்சி
ஜோதிடத்தில் முக்கியமான கிரகங்களில் ஒன்றாக இருக்கும் குரு பகவான் தற்போது மிதுனத்தில் பயணித்து வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தினை மாற்றப் போகின்றார்.
தற்போது புனர்பூசம் நட்சத்திரத்தில் இருந்து வரும் நிலையில், 2026ம் ஆண்டில் பூசம் நட்சத்திரத்தில் பிரவேதிப்பார். குருபகவானில் இந்த பெயர்ச்சியானது சில ராசியினருக்கு ரட்டிப்பான பலனைக் கொடுக்கின்றது.
அந்த வகையில் எந்தெந்த ராசியினர் இரட்டிப்பான பலனை பெறப்போகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கடகம்
குரு பெயர்ச்சியானது கடக ராசியினருக்கு மிகுந்த நன்மையை அளிப்பதாக கூறப்படும் நிலையில், தொழிலதிபர்களுக்கு பொற்காலமாகவும், புதிய முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுக்குமாம்.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சாதகமான சூழல் நிலவுகின்றது. அதே போன்று புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையும் கிடைக்கும்.

கன்னி
குருபெயர்ச்சி காரணமாக கன்னி ராசியினருக்கும் சாதகமான பலன் கிடைப்பதுடன், நீண்ட காலமாக இருந்து வந்த சிக்கல் மற்றும் தடைகள் விலகும்.
மன அழுத்தம் குறைந்து மன அமைதியும் மகிழ்ச்சியும் கூட மேல் ஓங்குகின்றது. குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வெற்றிகரமாக அமைவதுடன், குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

தனுசு
குரு பெயர்ச்சியின் காரணமாக தனுசு ராசியினர் பலன்மைகளை பெறுவதுடன், வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளும் கிடைக்கும்.
எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுடன், வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கு ஏற்ப வேலைகள் சிறந்த நிறுவனத்தில் கிடைக்கும்.
“ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ” குரு பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கு இந்த மந்திரத்தினை தினமும் கூறவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |