Bigg Boss: பள்ளிக்கூட டாஸ்கில் அரங்கேறிய பாசப்போராட்டம்! கதறி அழும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பள்ளிக்கூட டாஸ்க் நடைபெற்றுள்ள நிலையில், போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அழ தொடங்கியுள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 12 பேர் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் வீட்டில் தலைவராக சுபிக்ஷா உள்ள நிலையில், பிக்பாஸ் வேறு வேறு டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை மிரள வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பள்ளிக்கூட டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இன்று வெளியான ப்ரொமோக்கள் அனைத்திலும் போட்டியாளர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
முதல் ப்ரொமோ காட்சியில் வியானா பொருட்களை திருடி வைத்தது சர்ச்சையாகிய நிலையில், கடைசியில் அவர் அழும் நிலைக்கு சென்றுள்ளார்.
இரண்டாவது அரோரா சக்தியிடம் சிக்கி அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டு அழுதுள்ளார். மூன்றாவதாக சாப்பாடு பிரச்சனையில் ரம்யா சாப்பிடாமல் எப்ஃஜே உடன் சண்டையிட்டு சென்றுள்ளார்.
பின்பு மற்றொரு காட்சியில் சுபிக்ஷாவின் ஐடி கார்டு போன நிலையில் சக்தி அதனை கண்டுபிடித்து கொடுத்து அண்ணன் பாசத்தை நிரூபித்துள்ளார். இந்த தருணத்தில் விக்கல்ஸ் சக்தி சுபிக்ஷாவின் ஒற்றுமை ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |