Bigg Boss: பிக் பாஸ் ஷெட்டில் குவிக்கப்பட்டுள்ள போலிசார்... உச்சக்கட்ட பரபரப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்தப்படும் நிலையில், போலிசார் பிக் பாஸ் ஷெட்டில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் நடைபெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸ் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசன் பல விமர்சனங்களை பெற்று வருகின்றனர்.
கடந்த மாதம் 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது வைல்டு போட்டியாளர்களுடன் 19 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இதில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், துஷார் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் ஷெட்டில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகின்றார்.

போராட்டம்
இந்நிலையில் இன்று படப்பிடிப்பு ஷெட்டின் முன்பு போலிசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். அதாவது தமிழ்நாடு வாழவுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினரின் மனநிலையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், சிலரின் தனியுரிமை, உணர்ச்சி, குடும்ப உறவுகள் அனைத்தையும் வெளியே வெளியிடுவது சமூக நாகரிகத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

இக்கட்சியின் மகளிர் அணி சென்னை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குடும்ப மதிப்புகளை காப்போம்... பிக் பாஸ் நிகழ்ச்சியினை தடை செய் என்று கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
இதனால் பிக்பாஸ் படப்பிடிப்பு ஷெட்டிற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சற்று பரபரப்பு எழுந்துள்ளது.
தொலைக்காட்சி நிர்வாகம், பிக் பாஸ் நிகழ்ச்சி விதிமுறைகளுக்குள் தான் நடைபெறுவதாகவும், எதுவும் அநாகரீகமாக ஒளிபரப்பப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |