Bigg Boss: சாண்ட்ராவின் காலில் விழுந்த எப்ஃஜே... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற டாஸ்கில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால், எப்ஃஜே சாண்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல அதிரடியான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் காமெடியும், சிரிப்புமான டாஸ்க்காக பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் சிரிப்புடன் சென்று கொண்டிருந்த டாஸ்கினை மக்களும் ரசித்து பார்த்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளில் மீண்டும் சண்டையிட ஆரம்பித்துள்ளார்.
இந்த சண்டையின் உச்சமாக போட்டியாளர் காலில் சக போட்டியாளர் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் எப்ஃஜே சாண்ட்ராவை முதலில் கேப்டன் இல்லை என்று பேசி அனுப்பியுள்ளார்.
பின்பு அவர் வீட்டு தலையாக கூறுவதை சாண்ட்ரா கேட்டவில்லை போன்று தோன்றுகின்றது. இதனால் இந்த வார வீட்டு தலையான எப்ஃஜே சாண்ட்ராவின் காலில் சென்று விழுந்துள்ளார்.
சாண்டாவிடம் வாக்கு வாதம் செய்யும் போதும், அவரின் காலில் போய் விழும்போதும் அவரது கணவரும், போட்டியாளருமான பிரஜன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |