அதிரடியாக வெளியேற்றப்பட்ட கானா பாலா.. ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் பயம் காட்டிய கமல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் கானா பாலா வெளியேற்றப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நபர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் விசித்ரா, ரவீனா, மணிசந்திரா, பூர்ணிமா, ஆர்ஜே பிராவோ, கானா பாலா, அக்ஷயா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கினர்.
ரவீனா அதிக ஓட்டு வாங்கி முதல் ஆளாகவும், அதன் பின்பு விசித்ரா, மணி, பூர்ணிமா, பிராவோ காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சரில் இருந்தவர்கள் அக்ஷயா, கானா பாலா, விக்ரம்... இதில் விக்ரம் கடைசி இடத்தில் இருந்துள்ள நிலையில், கடுமையான பயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் பிக் பாஸ் யாருடைய வம்புக்கு போகாத கானா பாலா இந்த வாரம் வெளியேறியுள்ளார். இனி வரும் வாரங்களிலும் அடுத்தடுத்து யார் வெளியேற போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |