தனுஷ் மகனை தேடி வீட்டிற்கே சென்ற காவல்துறை.. வீட்டில் நடந்தது என்ன?
நடிகர் தனுஷ் மகன் செய்த வேலையால் அவரது வீட்டிற்கே காவல்துறை அதிகாரிகள் சென்று அபராதம் வசூலிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் பன்முக திறமை கொண்டவரும் ஆவார். இவர் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை சில ஆண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்றார்.
இவர்களது பிள்ளைகள் யாத்ரா லிங்கா இருவரும் தாய் மற்றும் தந்தை இருவரிடம் மாறி மாறி வசித்து வருகின்றனர். தனுஷின் மூத்த மகன் யாத்ராவிற்கு தற்போது 17 வயதாகியுள்ளது.
இவர் செய்த செயலால் காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்கு சென்றுள்ளார்களாம். ஆம் ஹெல்மெட் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளதாக இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் விசாரணை மேற்கொண்ட போது, உண்மை என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போயஸ் கார்டன் பகுதியில் அவர் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற காணொளி ஆதாரதை்தையும் வைத்து காவல்துறை அதிகாரிகள் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்களாம்.
மேலும் இந்த தொகையை வசூல் செய்வதற்கு அவரது வீட்டிற்கே சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |