50 வயதை கடந்தும் திருமணம் செய்யாத பிரபல நடிகைகள்! சிங்கிளா இருக்க என்ன காரணம்?
தமிழ் சினிமாவை பொறுத்தளவில் நடிகர்கள் எத்தனை வயதானும் ஹுரொவாகவே படங்களில் நடித்து வருகின்றார்கள்.
ஆனால் நடிகைகளால் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் கதாநாயகியாக தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ள முடியவதில்லை.
திருமணத்தின் பின்னர் தான் நடிகைகளால் கதாநாயகியாக நிலைக்க முடியாது என்ற ஒரு விம்பம் பலரின் மத்தியிலும் காணப்படுகின்றது.
ஆனால் அப்படி முன்னணி நடிகைகளாக திரையுலகில் வலம் வந்த சில நடிகைள் 50 வயதை தொட்டும் இன்னும் திருமண பந்தத்தில் இணையாமல் சிங்கிளாகவே இருக்கின்றார்கள். இருந்து அவர்களால் காதாநாயகினளாக வலம்வர முடியவில்லை.
அந்தவகையில், 50 வயதை கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழும் சில பிரபல நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிங்கிளாகவே இருக்கும் பிரபல நடிகைகள்
கோவை சரளா
நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் கோவை சரளா இன்னும் திரைப்படங்களில் அம்மா கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு தற்போது 63வயதாகும் நிலையில் இவர் சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றார்.
ஷோபனா
நடனத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்ற தளபதி படத்தின் ஹீரோயின் ஷோபனாவுக்கு தற்போது 55 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் நடனத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.
தபு
90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம்பிடித்த காதல் தேசம் திரைப்பட நாயகி தபு, 53 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கின்றார். இவர் திருமணம் செய்யமல் இருப்பதற்கு காதல் தோல்வி தான் காரணம் என்று சில பேட்டிகளில் கூறியிருக்கின்றார்.
நடிகை சித்தாரா
80 களில் பெரும்பாலான ஆண்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை சித்தாரா. கண்ணியமான தனது நடிப்பால் கதாநாயகியாக மட்டும் தனது நடிப்புக்கு முடிவுக்கட்டாமல் இன்றும் பல மொழிகளில் அம்மா மற்றும் அக்கா போன்ற கதாபாத்திரங்களில் தனது திறமையை பறைசாற்றும் இவர் நிறைவேறாத காதல் காரணமாகவே 51 வயதை கடந்தும் இன்னும் தனிமையில் வாழ்கின்றார். இவர் திருமணம் செய்யம் இருக்க குடும்ப சுமையும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.
நக்மா
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பாட்ஷாவில் பட்டையை கிளப்பியவர் நடிகை நக்மா, இவர் ஜோதிகாவின் அக்கா என்பது அனைவரும் அறிந்ததே. இவரும் காதல் தோல்வி காரணமாகதான் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்கிறார். இவருக்கு தற்போது 50 வயதாகின்றது.
ஷகிலா
51 வயதை கடந்துள்ள ஷகிலாவும் இன்றும் திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்கின்றார். இவர் ஒரு பேட்டியில் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்ட்ட போது, ஒருத்தன் மூஞ்சயே பாத்துக்கிட்டு இருக்க முடியாது... என நகைச்சுவையாக பதிலளித்திருப்பார்.
கனகா
90 களில் கண் அழகால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை கனகா தற்போது 51 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்துக்கொள்ளாமல் தனியில் வாழ்ந்து வருவதுடன், பொதுவெளிகளில் இருந்தும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |