திரைப்படத்துக்காக மொட்டையடித்துக் கொண்ட ஹீரோக்கள்! யார் யார் தெரியுமா?
அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை ரசிகர்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு அம்சம் என்றால் அது திரைப்படம் படம்.
தங்களுடைய ஹீரோக்கள் படம் வெளியாகும் நாள் அன்று ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
ஹீரோக்களும் ரசிகர்களுக்கு பிடித்த திரைக்கதையை செலக்ட் செய்தும், சமூகத்திற்கு கருத்துகளை சொல்லும் விதமாகவும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர்.
திரைக்கதைக்காக தங்களையே மாற்றிக்கொள்ளும் நடிகர்களும் ஏராளம், உடல் எடையை அதிகரித்தல். எடையை குறைத்தல், பள்ளி பருவ மாணவன், மொட்டையடித்தல் என உருவ அமைப்பை மாற்றிக் கொள்கின்றனர்.
இந்த பதிவில் திரைப்படத்துக்காக மொட்டையடித்துக் கொண்ட நடிகர்களை பற்றியே பார்க்கப்போகிறோம்.
கமல்ஹாசன்
பல புதுமையான தொழில்நுட்பங்களுடன் 2001ம் ஆண்டு வெளிவந்த படம் ஆளவந்தான், இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் கமல்ஹாசன்.
மனநோயில் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரத்திற்காக மொட்டை அடித்து உடல் எடையை அதிகரித்து உருவத்தோற்றத்தையே மாற்றிக் கொண்டார்.
பல தமிழ் ஹீரோக்கள் நிராகரித்த இந்த கதையை மிக தைரியமாக எடுத்து தன் அசாத்திய நடிப்பால் மிரளவைத்திருப்பார் கமல்ஹாசன்.
ரஜினிகாந்த்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் சிவாஜி.
ரசிகர்கள் இன்றளவும் கூட கொண்டாடும் ரஜினியின் படங்களில் முக்கியமாக சிவாஜியையும் குறிப்பிடலாம்.
கடைசி காட்சியில் மிக ஸ்டைலாக தனக்கே உரித்தான நடிப்பில் அசத்தியிருப்பார் ரஜினிகாந்த்.
விக்ரம்
தமிழ் ரசிகர்களுக்கு விக்ரமின் அர்ப்பணிப்பு பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாகவே மாறுபவர் விக்ரம். ஷங்கரின் ஐ படத்திற்காக உடல் எடையை குறைத்து மொட்டையடித்து அடையாளம் தெரியாத அளவுக்கு தன்னை தானே செதுக்கிக் கொண்டிருப்பார்.
இதற்கு முன்னதாக பாலாவின் சேது படத்திற்காகவும் மொட்டையடித்தார் விக்ரம்
சூர்யா
சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் கஜினி, நினைவாற்றலை இழந்து தவிக்கும் நபராக மிரட்டியிருப்பார்.
இந்த படத்தில் ஒரே நபர் இருவேறு காலகட்டங்களில் இருக்கும் வித்தியாசத்தை மிக தத்ரூபமாக காட்டியிருப்பார்கள்.
மிக ஸ்டைலாகவும், அதே சமயம் மொட்டையடித்து நோயுடன் அவதிப்படும் நபராகவும் அசத்தியிருப்பார் சூர்யா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |