புதிய போட்டொஷீட்டில் இளவரசியை போல் காட்சியளிக்கும் தமன்னா
தமன்னா ஒரு புதிய போட்ஷீட்டில் கண்ணை கவரும் நீல நிற லெஹங்காவை அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வைலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமன்னா
கௌரவ் குப்தா வடிவமைத்த அழகான லெஹங்காவை தமன்னா அணிந்திருந்தார். இதை செய்த ஆடை வடிவமைப்பாளர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த உடையில் தமன்னாவை பார்த்த ரசிகர்கள் தமன்னா ஏஞ்சல் எனவும், மிகவும் அழகாக இருக்கிறீர்கள் எனவும் வர்ணிக்கின்றனர். இந்த ஆடையில் இவர் இளவரசி போன்ற தோற்றத்தை கொண்டிருந்தார்.
இதன்போது தமன்னா கூறுகையில் “கேளுங்கள், கௌரவ் ஆடைகள் அனைத்தும் மிகவும் அழகாக உள்ளன. இது பாரம்பரிய மற்றும் சமகாலத்தின் ஒரு நல்ல சமநிலையை பிரதிபலிக்கிறது.
அதனால்தான் இது மிகவும் அழகாகவும் சிரமமின்றியும் செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன்”என்று குறிப்பிட்டார்.