என்னிடம் வைர மோதிரமா... அப்போ இதுதான் உண்மையா? தமன்னா கொடுத்த விளக்கம்
உலகின் ஐந்தாவது விலையுயர்ந்த வைர மோதிரத்தை வைத்திருப்பதாக சொன்ன தகவல் உண்மை இல்லை என்று சொல்லியிருக்கிறார் தமன்னா.
நடிகை தமன்னா
தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்தும் தனக்கென தனி தனி மொழி ரசிகர்களை ஒன்றாக சேகரித்திருக்கிறார்.
இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
எல்லாம் வெறும் புரளிகள் தான்
இந்நிலையில் தமன்னாவிடம் உலகின் ஐந்தாவது பெரிய வைர மோதிரம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் உண்மையில்லை என்று தற்போது சொல்லியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது, நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் நடித்த போதே ராம்சரணின் மனைவி உபாசனா தமன்னாவுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்.
அந்த ஆண்டும் இதே சர்ச்சை பரவியது. நான் அணிந்து இருந்தது வைர மோதிரம் அல்ல பாட்டில் ஓப்பனர் தான் அது. பாட்டில் ஓப்னர் தான் உங்களுக்கு வைர மோதிரம் போல இருக்கிறதா என கேட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |