36 வயதிலும் குறையாத அழகு! தமன்னா பிறந்த நாளை யாருடன் கொண்டாடிருக்காங்கன்னு பாருங்க
நடிகை தமன்னா தனது 36 ஆவது வயது பிறந்தநாளை தனது அம்மா மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அசத்தலாக கொண்டாடிய காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
நடிகை தமன்னா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் தமன்னா. கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

அதனை தொடர்ந்து தமன்னாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலும் நடித்துவிட்டார்.
இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலில் ஆடிய நடனம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து,'ஸ்டிரி 2, ரெய்டு 2' படங்களிலும் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடினார்.தமன்னாவிற்கு தொடர்ந்து சிறப்பு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றது.

36 வயதை கடந்த நிலையிலும் குறையாத அழகில் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார். இந்நிலையில் தமன்னா தனது 36 ஆவது பிறந்த தினத்தை கேக் வெட்டி தனது அம்மா மற்றும் நெருங்கிய வட்டாரத்துடன் சிறப்பாக கொண்டாடி உள்ளாடியுள்ளார்.

நடிகை மிருனாள் தாகூர் உள்ளிட்ட பலர் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
.@tamannaahspeaks Turns 3️⃣6️⃣ today ❤️, celebrated with friends, family and colleagues 🎉😘#HappyBirthdayTamannaah#HBDTamannaahBhatia#Tamannaah #TamannaahBhatia #HappyBirthdayTamannaahBhatia#Tamannah #Tamanna #TamannahBhatia
— 𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗖𝗞 (@Suriya_Speaks) December 21, 2025
#IndianActress #TamannaahBhatia𓃵 pic.twitter.com/YSydW7fVJh
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |