ஸ்டைலான நடிகைக்கான பட்டத்தை வென்ற தமன்னா
இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா Lokmat Most Stylish Award 2022 என்ற விருதினை பெற்றது குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவர் முதல் முதலில் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி என்னும் திரைப்படத்தில் இவரது எதார்த்தமாக நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றார்.

தமன்னாவிற்கான விருது
இவ்வாறு அதிக ரசிகர்களை பெற்றுள்ள தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் தனது ஸ்டைலிஷ் ஆனா புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து அவர்களை குஷிப்படுத்துவது போன்றவற்றை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் Lokmat Most Stylish Award 2022 என்கின்ற விருதினை பெற்றுள்ளார்.
இது குறித்து தனது மகிழ்ச்சியை வீடியோ பதிவின் மூலம் பகிர்ந்துள்ள தமன்னா அதில், “விருதுக்கு மிக்க நன்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டு பகிர்ந்து இருக்கிறார்.