எனக்கு திருமணமா? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த தமன்னா
தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் மாத்திரமின்றி ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
சினிமாவைப் பொறுத்தவரையில் கிசு கிசுக்கள் ஒன்றும் புதிதல்ல. அந்த கிசு கிசுக்கள் நடிகை தமன்னாவையும் விட்டு வைக்கவில்லை. அண்மைக் காலமாக தமன்னா பற்றிய காதல் கிசுகிசுக்கள் அதிகமாக பரவி வருகின்றன.
இதைக் குறித்து தமன்னா ஒரு பேட்டியில் கூறியதாவது, “இதுபோன்ற வதந்திகளை யார் பரப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் படிக்கும் சிரிப்புதான் வருகிறது. அவரவருக்கென்று இங்கு சொந்த வாழ்க்கை இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் தமன்னாவிற்கு மும்பையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபரை பெற்றோர் பார்த்து முடிவு செய்திருப்பதாகவும் அவரை திருமணம் செய்ய தமன்னா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் பரவி வந்தது.