'உலகின் அசிங்கமானது' : போட்டியில் 1ம் இடம் வந்த நாய் - வென்ற பரிசுத்தொகை எவ்வளவு?
இரண்டு வயது ஆங்கில-பிரெஞ்சு புல்டாக் கலவையான பெட்டூனியா "உலகின் அசிங்கமான நாய்" என்று முடிசூட்டப்பட்டுள்ளது.
பெட்டூனியா நாய்
உலகின் அசிங்கமான நாய் போட்டி சுமார் 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி "அனைத்து நாய்களையும் சிறப்பு மற்றும் தனித்துவமாக்கும் குறைபாடுகளை கொண்டாடுகிறது என்று கூறப்படுகின்றது.
இந்த நிகழ்விற்கான யோசனை 1971 ஆம் ஆண்டு பெட்டலுமாவில் நிதி மூலமாக பணத்தை திரட்டும் வழி மூலம் வந்தது.
இந்த போட்டியில் பல நாய்கள் பங்கேற்கின்றன. இதில் பல நாடுகளில் இருந்தும் நகரங்களில் இருந்தும் நாய்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் வருகை தருவார்கள்.
"இந்தப் போட்டி அனைத்து விலங்குகளையும் வணங்குவதற்கும் தத்தெடுப்பதன் நன்மைகளுக்கும் ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது" என்று போட்டி கருப்பொருள் கூறுகின்றது.
இந்த நிலையில் உலகில் அசிங்கமான நாய்களுக்கான போட்டியில் பெட்டூனியா நாய் முதலாம் இடத்தை பிடித்துள்ளது. இது முற்றிலும் உடலில் முடி நீக்கப்பட்டு தோல் சுருக்கங்களுடன் காணப்படும். பார்க்க அசிங்கமாக இருக்கும் இந்த நாய்கள்.
"உலகின் அசிங்கமான நாய்" - பரிசுத்தொகை
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின் யூஜினைச் சேர்ந்த பெட்டூனியா நாய்க்குட்டி கடந்த வாரம் கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டா ரோசாவில் உள்ள சோனோமா கவுண்டி கண்காட்சியில் நடைபெற்ற நிகழ்வின் போது 5,000 அமெரிக்க டாலர் (ரூ. 4 லட்சம்) பரிசை வென்றது. 8 வயது சீன க்ரெஸ்டட் மற்றும் 13 வயது சிவாவா உட்பட 10 போட்டி நாய்களை தோற்கடித்து பெட்டூனியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. தற்போது உலகில் மிகவும் அசிங்கமான நாய்க்குட்டி இது தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |