முன்னாள் காதலைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் சொல்லிருக்கீங்களா?
பொதுவாக காதல் என்றாலே அது வலி, சந்தோஷம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என அனைத்தும் நிறைந்ததுதான்.
கால மாற்றத்துக்கு ஏற்ப சில நேரங்களில் ஒரு உறிவிலிருந்து இன்னொரு உறவுடன் இணக்கமாவது மனித இயல்புதான். ஆனால், பழைய உறவுகளும் அதன் நினைவுகளும் முற்றாக அழிந்துவிடும் என்று கூறிவிட முடியாது.
image - istock
இங்கு பழைய உறவுகள் என்று குறிப்பிடுவது முன்னாள் காதலைத்தான். ஒருவர் மீது காதல் வயப்படுவதும் பின்பு அந்தக் காதல் முறிவதும் தற்போதைய சூழலில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால், கேள்வி என்னவென்றால் நமது முந்தைய காதல்களைப் பற்றி நமது வாழ்க்கைத் துணையிடம் மறைக்காமல் கூறுகின்றோமா? என்பதுதான்.
அண்மையில் டேட்டிங் செயலியொன்று ஒரு ஆய்வை முன்னெடுத்தது. அதில், 61 சதவீதமானவர்கள் தங்கள் முன்னாள் காதல்களைப் பற்றி வாழ்க்கைத் துணையுடன் பேசியும் விவாதித்தும் இருப்பதாகவும், 39 சதவீதமானோர் இது தங்கள் உறவை பாதிக்கக்கூடும் என்று கவலைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
image - Rogger k allen
இது 21 - 35 வயதுக்குட்பட்ட பெண்களிடம் நடாத்தப்பட்ட சோதனையிலிருந்து தெரிய வந்துள்ளது. முந்தைய காதலை தற்போதைய வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்து கொள்வதனால், இந்த உறவு உறுதியாக மாறும் என்கிறது இந்த ஆய்வு.
அதேசமயம், 18-25 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் கடந்த காலத்தை தற்போதையை வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
image - Zing instruments
எது எவ்வாறெனினும், இந்த விடயத்தில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். ஏனென்றால் உங்கள் முன்னாள் காதல்களை இந்நாள் வாழ்க்கைத் துணை எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிறகு கூறுவதா இல்லையா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.