தாலிபான்களின் பீதியால் முண்டியடித்த மக்கள் கூட்டம்- தாக்குதலில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சி வீடியோ
காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானின் பகுதிகளும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதையடுத்து தாலிபன்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற அலைமோதிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், காபூலில் உள்ள விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. விமான டார்மார்க் எனப்படும் தொங்கும் நுழைவு பாதையில் அவர்கள் தொங்கியவாறு விமானத்தில் ஏற முயன்றனர்.
இதனால் பாரம் தாங்காமல் அந்த டார்மார்க் வளைந்துள்ளது,. விமானத்தில் ஏற முயன்ற ஆப்கானியர்களை விரட்ட அங்கிருந்த அமெரிக்க படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டி விரட்டினர்.
இதனிடையே காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனைத்து பயணிகள் விமானங்களையும் ரத்து செய்வதாகவும், மக்கள் விமான நிலையங்களில் திரள வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கிய 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Shocking footage from Kabul Airport shows several Afghans chasing down a US Air Force plane as it takes off, with some reportedly falling to their death while clinging to the plane. pic.twitter.com/BIr3obXC6k
— Al Jazeera English (@AJEnglish) August 16, 2021