எண்ணெய் தேய்த்து குளிக்கிறீர்களா? அன்றைய நாளில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
தற்போது இருக்கும் பழக்க வழக்தை விட முன்னோர்கள் எமக்கு அடிக்கடி கூறிவரும் தொன்று தொட்ட பழக்கம் மிகவும் பயன் தரும். நம் முன்னோர்கள் நம்மை எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வார்கள்.
இது உடல் நலத்தில் நன்மை கொடுக்கும் என்பதையும் கூறுவார்கள். உடலில் சூடு அதிகமாக இருப்பவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நன்மை தரும். இந்த விடயம் சித்த மருத்துவத்திலும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சில விடயங்களை நாம் செய்ய கூடாது அது என்னென்ன விடயங்கள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எண்ணெய் தேய்த்து குளித்தல்
எண்ணெய் குளியல் நமது உடலில் பல நன்மைகளை தருகிறது. அது உடல் சூட்டை தணிக்கிறது, ஆழ்ந்த உறக்கத்தை தரகிறது, உடல் வலியைக் போக்கும், சருமம் மற்றும் தலைமுடிக்கு பொலிவைத் கொடுக்கும்.
சிலருக்கு மூட்டு வலி இருந்தால் அவாகள் மூட்டுகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து குளித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த எண்ணெய் குளியல் குறிப்பிட்ட சிலர் மேற்கொள்ள கூடாது.
அதாவது கர்ப்பிணி பெண்கள், தீவிர நோயால் அவதிப்படுபவர்கள், உடலில் காயங்கள் ஏதேனும் இருந்தால், மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள், உடலில் அதிக வலி உள்ளவர்கள், கபம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது செய்ய கூடாதவை
எண்ணெய் தேய்த்து குளிக்கின்றோம் என்றால் நாம் சாதாரண தண்ணீரை பயன்படுத்த கூடாது. ஓரளவு கொதித்து ஆறிய மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்தல் வேண்டும்.
குளித்த பின்னர் தலையை இயற்கையாக நன்றாக காய விட வேண்டும். நீங்கள் எண்ணெய் குளியல் குளித்த நாளில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இருக்க கூடாது.
அதிக காற்றோட்ட இடத்தில் இருந்தால் அது உடலில் குளிர் காற்றை உள்ளே அனுப்பும். உடலும் குளிச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் அதிகமாக சளி பிடிக்க வாய்ப்பு அதிகம். அதிக வெயிலில் இருந்தால் உஷ்ணத்தால் உடல் சூடு அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும்.
எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் பகலில் உறங்க கூடாது. இது கண்பார்வைக்கு நல்லதல்ல. இது தவிர அன்றைய நாளில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், மாவு
பொருட்கள், மாங்காய், பூசணிக்காய், தேங்காய், எள், உளுந்து, கொள்ளு, அரைக்கீரை, அகத்திக்கீரை, கத்தரிக்காய், மொச்சை, கொத்தவரங்காய், நண்டு, மீன், ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் குளியலின் முழுப்பயனையும் விரும்பினால் இந்த விடயங்களை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |