தலைவலிக்கு உடனே மாத்திரை எடுக்குறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க
தலைவலி ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் பெறுவதற்கு வலி நிவாரணிகளை பயன்படுத்துவது என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தலைவலி
இன்றைய வேகமாக வாழ்க்கை, மோசமான உணவு பழக்கங்கள், அமர்ந்து கொண்டு வேலை செய்வதல் என பல காரணங்கள் நமது உடல் நலத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
இதில் பெரும்பாலான மக்களுக்கு தலைவலி என்பது பொதுவாக பிரச்சனையாக உள்ளது. தூக்கமின்மை, மன அழுத்தம், நீரிழப்பு போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படலாம்.
தலைவலி வந்தால் சிலருக்கு காபி அல்லது டீ எடுத்துக்கொண்டாலே சரியாகிவிடும், ஆனால் ஒரு சிலர் இதற்காக வலி நிவாரணிகளை பயன்படுத்துகின்றனர். இவை உடம்பிற்கு தீங்கு ஏற்படுத்தும்.
வலி நிவாரணி எடுத்துக் கொள்ளலாமா?
தலைவலி வந்ததும் உடனேயே வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்வதால், வீக்கம் மற்றும் செரிமான பிரச்சனையையும், வயிற்று புண்களையும் ஏற்படுத்தும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களிலும் ஆபத்தான விளையை ஏற்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து, இதயம் தொடர்பான நோய்களும் ஏற்படும்.
ஆதலால் தலைவலிக்கு அடிக்கடி வலி நிவாரணி எடுத்துக் கொள்ளாமல், எப்போவதாவது எடுத்துக் கொள்வது உடம்பிற்கு பிரச்சனையை ஏற்படுத்தாமல் இருக்கும்.
எவ்வாறு தலைவலியை சரிசெய்யலாம்?
தலைவலி வராமல் இருப்பதற்கு தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். தலைவலியை தடுப்பதற்கு சரியான அளவு தண்ணீர் பருகுவது அவசியமாகும். எப்பொழுதும் நீரேற்றத்துடன் உடம்பை வைத்திருந்தால் தலைவலி ஏற்படுவது குறையும்.
Image courtesy: Shutterstock
நீரிழப்பை ஏற்படுத்தும் காபி மற்றும் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் காஃபின் தலைவலியை போக்க உதவும் என்றாலும் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
சரியான தூக்கமின்மை தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே தினமும் 6 முதல் 7 மணி நேரம் நன்றாக தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
உங்களது உணவுப்பழக்கமும் தலைவலியை ஏற்படுத்த முக்கிய காரணமாகும். ஆதலால் ஒருநாளைக்கு தேவையான சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பின்பு சாப்பிட்டாலும் தலைவலி ஏற்படும்.
மடிக்கணினி மற்றும் கணினிகளில் வேலை செய்பவர்களுக்கு கழுத்து விறைப்பதால் தலைவலி ஏற்படுகின்றது. அதே போன்று தட்டச்சு செய்யும் போதும் தலையைக் குனிந்து அதிக நேரம் இருப்பதால் தலைவலி ஏற்படும். இதனை சரிசெய்ய 5 நிமிடங்களுக்கு வேகமாக நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதிக நேரம் திரைப் பார்ப்பதாலும், சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதாலும் தலைவலி ஏற்படும். இத்தருணத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை பருகவும், அல்லது ஏதாவது ஒன்றை சாப்பிடவும்.
வேலையில் இருப்பவர்கள் தலைவலி ஏற்படும் போது 10 நிமிடம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும். ஒவ்வொருமுறை தலைவலி ஏற்படும் போதும் மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |