பல கோடி ரூபாய் செலவில் உருவான காலணி வடிவ தேவாலயம்! எதற்காக கட்டப்பட்டது தெரியுமா?
பொதுவாகவே உலகில் காணப்படும் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் குறித்து சிந்திக்கும் போது சில கட்டிடங்களின் வடிவமைப்பு எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
அந்த வகையில் தாய்வானில் அமைக்கப்பட்டடுள்ள காலணி வடிவ கண்ணாடி தேவாலயம் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வரும் ஒரு கட்டிடமாக பார்க்கப்படுகின்றது.
தாய்வானின் சியாயி கவுண்டியில் அமைந்துள்ள இந்த கண்ணாடி கட்டிடம் ஒரு தேவாலயம் ஆகும். தேவாலயம் என்றவுடன் இது ஒரு பிரார்த்தனை கூடம் என்று பலரும் நினைக்க கூடும்.
ஆனால் இந்த தேவாலயம் வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆலயத்திற்குள் காதலர்களுக்கான நாற்காலிகள், பிஸ்கட்கள் மற்றும் கேக்குகள் போன்றன வைக்கப்பட்டிருக்கும்.
ஹை-ஹீல் ஷூ போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாயலம் 320க்கும் மேற்பட்ட நிறமுள்ள கண்ணாடி பேனல்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.
US$686,000 செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம், தாய்வானின் ஒரு முக்கிய சுற்றுலாப் பகுதியாக மாற்றம் பெற்றிருக்கின்றது.
கட்டிடம் உருவாக்கப்பட்ட பின்னணி
1960 களில் வாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட 24 வயது பெண் பிளாக்ஃபுட் நோயால் பாதிக்கப்பட்டமையால் அவருடைய இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் அந்த பெண்ணின் திருமணமும் நின்று போய்விட்டது.அதன் பின்னரான காலத்தை அந்த பெண் திருமணமாகாமல் தேவாலயத்தில் கழித்ததாக கூறப்படுகிறது.
இவர் நோயால் பாதிக்கப்பட்ட காலத்தை நினைவூட்டுவது மட்டுமல்லாமல், பெண்கள் தங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி நடக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகவே இந்த தேவாலயம் காலணி வடிவத்தில் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |