கவர்ச்சியான ஆடையுடன் கடவுளை அவமதித்தாரா நடிகை டாப்சி?
நடிகைகள் அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்குவது இயல்புதான்.
அந்த வகையில் ஆடுகளம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை டாப்சி.
தமிழில் பெரிதாக ஜொலிக்க முடியாவிட்டாலும் பொலிவுட்டில் பல படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். தற்போது ஜெயம் ரவியுடன் ஜன கன மன திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பொன்றில் டாப்சி கலந்து கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்தபோது, கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார்.
இவ்வாறு கவர்ச்சி ஆடையில் அம்மன் உருவம் பொறித்த நெக்லஸ் அணிந்து வந்தது தவறு என்றும் டாப்சி கடவுளை அவமதித்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.