முதல் டி20 போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு தண்ணி காட்டி இந்திய அணி அபார வெற்றி
ஐபிஎல் மற்றும் டி20 உலககோப்பை முடிந்த நிலையில், தற்போது இந்திய அணி நியூசிலாந்துடன் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறது. இதனிடையே, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக மார்ட்டின் கப்தில் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். இவரையடுத்து சாப்மன் 63 ரன்களை விளாசினார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில், 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்களுடனும், சூர்ய குமார் யாதவ் 62 ரன்களும், அடித்தனர். இவர்களு அவுட்டான பின், கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது கடைசி ஓவரை நியூசிலாந்தின் டேரில் மிட்செல் வீசினார். அந்த ஓவரில் முதல் 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.