சிம்புவுக்கு பெண் கேட்டு போய் அசிங்கப்பட்ட டி.ராஜேந்தர்! இந்த வயதில் இப்படி ஒரு நிலையா?
நடிகர் சிம்புக்கு அவரின் தந்தையான டி ராஜேந்தரர் பெண் கேட்டு சென்ற இடத்தில் சிலம்பரசனின் வயதை குறிப்பிட்டு காட்டி அசிங்கப்படுத்தியுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றது.
தற்போது நடிகர் சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்டது. தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த பெண் கிடைத்தால், உடனடியாக சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக டி ராஜேந்தர் தன்னுடைய சொந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள உறவினர்களிடம் பெண் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

வயதால் சிம்புவுக்கு பெண் கொடுக்க தயக்கம்
அதில் சிலர் சிறந்த சிலம்பரசனின் வயதை குறிப்பிட்டு பெண் கொடுக்க மறுத்து விட்டதாகவும், இன்னும் சிலர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்க தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
எனும் டி.ராஜேந்தர் விடாமுயற்சியாக பெண் தேடும் படலத்தை கையில் எடுத்து வருகின்றாராம். சமீபத்தில் கூட தொழிலதிபர் ஒருவரின் பெண்ணை சிலம்பரசனுக்கு பெண் கேட்டுள்ளார்.
அவர்கள் யோசித்து சொல்வதாக தெரிவித்ததாகவும், பின்னர் சிம்புவின் வயது மற்றும் அவர் சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் வெளிப்படையாக சிக்கியுள்ளதை காரணம் காட்டி பெண் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பணம், வசதி, பெரிய குடும்பம் என அந்தஸ்தில் இருந்தாலும் சிம்புவுக்கு பெண் கேட்க செல்லும் இடங்களில் எல்லாம், பலரும் பெண் முடியாது என அசிங்கப்படுத்துவது போல் கூறுவதால் மிகுந்த டி.ராஜேந்தர் மன உளைச்சலிலும் உள்ளாராம்.
இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த அளவிற்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை.