கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை... தாங்க முடியாமல் கதறி அழுதேன்... மனம் திறந்த டி.ராஜேந்தர்
கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தைக் கேடு கண் கலங்கி அழுதேன் என்று பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் மனம் திறந்து பேசியுள்ளார்.
டி.ராஜேந்தர்
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவலால் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனையடுத்து, நடிகரும், அவரின் மகனுமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்திரரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு தற்போது நலம் பெற்றுள்ளார்.

மனம் திறந்த டி.ராஜேந்தர்
இந்நிலையில், சமீபத்தில் டி.ராஜேந்தர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், உங்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் எம்.ஜி.ஆர், சிவாஜியை பார்த்து வளர்ந்தவன். அவர்கள் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அதன் பிறகு எனக்கு பிடித்த நடிகர்கள் என்றால் அது ரஜினி மற்றும் கமல்ஹாசன்தான். நான் கமல்ஹாசனின் மிகப் பெரிய ரசிகன். அவர் கட்சி துவங்கியபோது இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட எனக்கு மனவருத்தம் அதிகமாகிவிட்டது.உடனே நான் நேரில் சென்று கமலை சந்தித்தேன். நீங்க கட்சி துவங்குங்க... அதுக்காக நடிக்க மாட்டேன் என்று சொல்லாதீர்கள் என்று கூறியபோது எனக்கு அழுகை வந்துவிட்டது. கதறி அழுத என்னை அவர் சமாதானப்படுத்தினார்.
தற்போது, கமல் ‘விக்ரம்’ படத்தில் நடித்து ஹிட் கொடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று பேசினார்.