ஆபத்து கட்டத்தை தாண்டிய டி.ஆர்! இன்று அறிக்கை வெளியிடுவாரா சிம்பு?

Manchu
Report this article
நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தரின் உடல்நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான சிம்பு இன்று மருத்துவ அறிக்கை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் டி.ராஜேந்தர்
1980 களில் நிறைய படங்களை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தவர் டி ராஜேந்தர். இவர் பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர், திரைப்பட விநியோகஸ்தர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை பெற்றவர்.
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது லட்சிய திமுக சார்பில் வேட்பாளர்களை களமிறக்கவும் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு கடந்த 4 நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டி.ஆருக்கு இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது மருத்துவர்கள் வேண்டாம் என கூறியுள்ளார்களாம்.
சிம்புவின் தந்தை நடிகர் டி. ராஜேந்தர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அபாய கட்டத்தில் உள்ளாரா?
இன்று சிம்பு அறிக்கை வெளியிடுவாரா?
தனது அடுக்குமொழி பேச்சால் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்திய டி.ராஜேந்தரின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமும் இருப்பதுடன் பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடுவார் அவ்வாறு இல்லையெனில் போரூர் மருத்துவமனை டி.ஆர் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தாலி கட்டும் மயங்கி விழுந்த மணமகள்! மயக்கம் தெளிந்து கொடுத்த ஷாக்
