சிம்பு திருமணம்: சீரியல் நடிகை கூறிய ஒற்றை வார்த்தையால் கண்கலங்கிய தந்தை TR
“நான் சிம்பு சாரை தான் திருமணம் செய்வேன்..” என நிகழ்ச்சியில் சீரியல் நடிகை கூற அதற்கு T. ராஜேந்திரன் கண்ணீருடன் கொடுத்த பதில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சிங்கிள் பசங்க.
இந்த நிகழ்ச்சியில் பிரபல ஜோடியாக கூமாபட்டி தங்கபாண்டி- சீரியல் நடிகை சாந்தினி இருவரும் இருக்கிறார்கள்.
ஒரே பாடலில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் இவர்கள் கடந்த வாரம் செய்த ஒரு வேலையால் இணையவாசிகளிடையே விமர்சனங்களை பெற்றுக் கொண்டனர்.
கண்ணீருடன் பேசிய TR
அதாவது, நிகழ்ச்சியில் முக்கிய நடுவராக இருக்கும் T. ராஜேந்திரன் முன்னிலையில், சீரியல் நடிகை சாந்தினி, “நான் திருமணம் செய்தால் சிம்பு சாரை தான் திருமணம் செய்வேன்..” என நகைச்சுவைக்காக கூறுகிறார்.

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர்
இந்த ஒற்றை வார்த்தையை கேட்ட பின்னர் T. ராஜேந்திரன் கண் நிறைய கண்ணீருடன், “ என்னுடைய மகனை உருகி உருகி காதலிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து வைப்பேன். அவனுக்கும் திருமணம் நடக்கும். ஒரு அப்பாவாக இதை கேட்கும் பொழுது கஷ்டமாக உள்ளது. நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சிம்புவிடம் கேட்க மாட்டேன்.
மாறாக இறைவனிடம் கேட்பேன். கட்டாயம் அது நடக்கும்...” என நெஞ்சில் கையை வைத்தப்படி கூறியுள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. “நகைச்சுவைக்காக அடுத்தவர்களின் குறைகளை வெளியில் கொண்டு வருவது அவர்களுக்கு வருத்தத்தை உண்டு பண்ணும்..” என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |