Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க

Kidney Disease Urination
By Manchu Sep 23, 2024 06:28 AM GMT
Manchu

Manchu

Report

உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பாக இருக்கும் சிறுநீரகம் பாதிப்படைந்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சிறுநீரகம்

சிறுநீரகங்கள் வயிற்றுக்கு பின்னால் மற்றும் விலா எலும்புகளின் கீழ் அமைந்துள்ள சிறிய பீன் வடிவ உறுப்பாகும்.

உங்கள் முதுகுத்தண்டின் இருபுறமும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் அளவும் 4 முதல் 5 அங்குலம் வரை மாறுபடும்.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கின்றது.

நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது.

குழந்தை போல சருமம் வேண்டுமா? பாலை சருமத்திற்கு இப்படி பயன்படுத்துங்கள்

குழந்தை போல சருமம் வேண்டுமா? பாலை சருமத்திற்கு இப்படி பயன்படுத்துங்கள்

நெஃப்ரான்களின் வேலை

சிறுநீரகங்கள் நெஃப்ரான்கள் எனப்படும் பல சிறிய வடிகட்டிகளைக் கொண்டுள்ள நிலையில், இவை ரத்தத்தில் உள்ள கழிவுகளை பிரித்தெடுத்து சிறுநீராக மாற்றுவதுடன், ரத்தத்தினை சுத்தப்படுத்தவும் செய்கின்றது.

சிறுநீரகம் சேதமடைந்தவுடன், இரத்தத்தின் வடிகட்டுதல் நிறுத்தப்படும், இது உங்கள் உடலில் திரவங்கள் மற்றும் கழிவுகள் சேர்ந்து பல நோய்களுக்கு வழிவகுக்கின்றது. இவை குமட்டல், மூச்சுத்திணறல், கணுக்கால் வீக்கம் போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றது. இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுவதுடன், மரணம் கூட ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

image: Shutterstock

இன்றைய காலத்தில் பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரக பிரச்சனை அதிகரிக்க அதன் அறிகுறிகளில்லா பாதிப்பே காரணம். பொதுவாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதன் அறிகுறிகள் தெரியாது. அது தீவிர நிலையை அடைந்த பின்பே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். எனவேதான் இது நாள்பட்ட சிகிச்சை எடுக்கும் பிரச்சனையாக உருவெடுக்கிறது.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

ஹீமோகுளோபின் அளவை கூட்டும் பேரிச்சம்பழம் அல்வா- ஈஸியாக செய்வது எப்படி?

ஹீமோகுளோபின் அளவை கூட்டும் பேரிச்சம்பழம் அல்வா- ஈஸியாக செய்வது எப்படி?

அறிகுறிகள் என்ன?

அதீத சோர்வு மற்றும் கவனமின்மை

சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் தோய்வு ஏற்படும்போது உடலின் நச்சுக்கள் மற்றும் அசுத்தங்கள் இருப்பின் அது சுத்தீகரிக்கப்படாமல் இரத்தத்தில் கலந்துவிடுகின்றது. இதனால் அனீமியா ஏற்பட்டடு அதிக சோர்வாகவும், பலவீனமானமாகவும் உணர்வதுடன், எந்தவொரு விடயத்திலும் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படும்.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

ஏன் ஒரு கப் நீருடன் நாளை துவங்க வேண்டும்? - பல ஆய்வுகளின் வெளிச்சம்

ஏன் ஒரு கப் நீருடன் நாளை துவங்க வேண்டும்? - பல ஆய்வுகளின் வெளிச்சம்

தூங்குவதில் சிரமம்

சிறுநீரகம் நச்சுக்களை சரியாக வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றாமல் இரத்தத்தில் தேங்கும் போது தூக்கமும் பாதிக்கப்படுகின்றது. இதனால் உடல் எடை அதிகரிப்பதுடன், சிறுநீரக நோய்க்கும் வழிவகுக்கின்றது. தூக்கமின்மை பிரச்சனையானது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் பொதுவாக பிரச்சனையாகும்.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

கடைசியா உங்க டூத் பிரஷை எப்போ மாத்துனீங்கனு நியாபகம் இருக்கா? மறக்காம இதை தெரிஞசிக்கோங்க

கடைசியா உங்க டூத் பிரஷை எப்போ மாத்துனீங்கனு நியாபகம் இருக்கா? மறக்காம இதை தெரிஞசிக்கோங்க

வறண்ட மற்றும் அரிக்கும் சருமம்

உடம்பில் தேவையற்ற நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் முக்கியமான வேலையாகும். இவை சரியான நடந்தால் மட்டுமே, சிவப்பணுக்கள் புதிதாக உருவாவதுடன், எலும்பு ஆரோக்கியமும் மேம்படுகின்றது. உடலில் மினரல் சத்துக்களின் தேக்கமும் சீராக இருக்கும். இவை சரியான நடக்கவில்லையெனில் தோலில் அரிப்பு, சரும எரிச்சல், வறட்சி ஏற்படுவதுடன், எலும்புகளும் பாதிக்கப்படுகின்றது.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

வீட்டில் எலிகளை ஒழிக்க என்ன செய்யலாம்?

வீட்டில் எலிகளை ஒழிக்க என்ன செய்யலாம்?

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், வழக்கத்திற்கு மாறாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். சிறுநீரகத்தின் வடிகட்டும் செயல் தடைப்படும்போது அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு தோன்றும். சில நேரங்களில் சிறுநீரக தொற்று ஏற்பட்டிருந்தாலும் இவ்வாறு தோன்றும்.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

mushroom pulao:வெறும் பத்தே நிமிடத்தில் மதிய உணவு தயாரிக்கணுமா? மஷ்ரூம் புலாவ் இப்படி செய்ங்க

mushroom pulao:வெறும் பத்தே நிமிடத்தில் மதிய உணவு தயாரிக்கணுமா? மஷ்ரூம் புலாவ் இப்படி செய்ங்க

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை மட்டும் சுத்தம் செய்து இரத்த செல்களை பாதுகாத்து, நச்சுக்களை மட்டும் சிறுநீர் வழியாக வெளியேற்றும். ஆனால் சிறுநீரகத்தின் செயல் தடைபடும் போது, சிறுநீர் வழியாக ரத்த செல்களும் கசியும். அவ்வாறு சீறுநீர் கழிக்கும் போது ரத்தம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் சிறுநீரக புற்றுநோய், சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரக தொற்று பாதிப்பு இருந்தாலும் பிரச்சனை ஏற்படும்.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

நுரையுடன் சிறுநீர்

சிறுநீர் கழிக்கும் போது நுரை வந்தால், அதில் புரோட்டீன் கலந்திருப்பதாக அர்த்தமாம். இவ்வாறு சிறுநீரில் நுரை வந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்தக் கொள்ளக்கூடாது.

கண்களை சுற்றி வீங்கிய தோற்றம்

சிறுநீரில் நுரை பொங்கி புரோட்டின் வெளியேறுவது சிறுநீரக பாதிப்பின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கின்றது. இவ்வாறு அதிக புரோட்டின் வெளியேறுவதன் அறிகுறியாக கண்களை சுற்றி வீங்கியது போன்ற தோற்றம் காணப்படும்.

கணுக்கால் வீக்கம்

சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் சோடியம் அதிக அளவில் தேங்கி கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படும். இந்த பிரச்சனை சிறுநீரக செயலிழப்பு மட்டுமின்றி இதயம், கல்லீரல் மற்றும் நாள்பட்ட கால் நரம்பு பிரச்சனை இருந்தாலும் கால் வீக்கம் ஏற்படும்.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

தசைப்பிடிப்பு

சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறையும்போது எலக்ட்ரோலைட்ஸ் சமநிலை இழக்கும். இதனால் கால்சியம் குறையும் மற்றும் போஸ்போரஸ் கட்டுப்பாடு குறையும். இதன் காரணமாக தசைப்பிடிப்பு அடிக்கடி ஏற்படும்.  

பசியின்மை

இது சிறுநீரக பாதிப்பின் பொதுவான அறிகுறியாக பசியின்மை ஏற்படுகின்றது. அதாவது நச்சுக்களின் தேக்கம் அதிகரிக்கும் போது பசியின்மை பிரச்சனை ஏற்படுகின்றது.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

image: Shutterstock

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பது எப்படி?

சர்க்கரை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்

குறைவான அளவு உப்பு உட்கொள்ளவும்

கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்

பழங்கள், காய்கள், கீரைகள், முழு தானியங்கள், குறைந்த பால் பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

மது அருந்துவதை தவிர்க்கவும்

உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளுதல் 

Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Kidney Failure In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US