சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் கொழுப்பு கல்லீரல் நோய்.. அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க
மனிதர்களுக்கு இருக்கும் உள் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமானது. இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம்.
கல்லீரலில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுத்தும் பொழுது அது உடல் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணர் ஒருவர் கல்லீரலில் ஆபத்து வராமல் எப்படி தடுக்கலாம் என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதன்படி, "கொழுப்பு கல்லீரல் நோயான மற்ற நோய்கள் போல் அல்லாமல் அமைதியாகத் தொடங்கி வளர்கிறது. காலப்போக்கில் வீக்கம், வடுக்கள் மற்றும் இறுதியில் கல்லீரலில் சிரோசிஸ் போன்ற கடுமையான பிரச்சனைகள் வரவும் வாய்ப்பு உள்ளது.
நச்சுப் பொருட்களிலிருந்து விலகி, வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேராமல் பார்த்து கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுக்குள் வைக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
இவ்வளவு ஆபத்துக்களை ஏற்படுத்தும் கொழுப்பு கல்லீரல் நோயை எப்படி வராமல் தடுக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய்
கொழுப்பு கல்லீரல் நோய் கொழுப்பு கல்லீரல் நோய் எனப்படுவது கல்லீரலில் கொழுப்பு படிதலை குறிக்கும்.
உங்களுடைய உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை சரியாக சேமிக்க முடியாத பொழுது இந்த நோய் வருகிறது. அதன் பின்னர் உங்கள் உடலில் உள்ள அந்த கொழுப்பை கல்லீரல், கணையம் மற்றும் வயிறு போன்ற இடங்களில் படியும்.
இது இடுப்பு அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இந்த நோய் ஆரம்பிக்கும் பொழுது வலி அல்லது அறிகுறிகள் இருப்பது போன்று தெரியாது.
சுமாராக 10- 20 ஆண்டுகளுக்கு மேல் செல்லும் பொழுது கொழுப்பு படிதல் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உங்களுடைய ஆரோக்கியமான கல்லீரல் சேதமடைந்து ஃபைப்ரோசிஸ் (Fibrosis) என்ற நிலையை ஏற்படுத்தும். இது காலப்போக்கில் வடு கல்லீரல் திசுக்களை சுருக்கி அதன் செயல்பாட்டைக் குறைக்கும்.
இது போன்ற சேதம் நாள்பட்ட நாட்களில் நடக்கும் பொழுது கல்லீரல் மீண்டும் உருவாக்கும் திறனை இழக்கும். இறுதியில் சிரோசிஸுக்கு வழிவகுத்து கல்லீரலின் செயற்பாட்டை முழுமையாக குறைக்கும்.
சிலர் மது மட்டுமே கல்லீரலை சேதப்படுத்துகிறது என நினைக்கிறார்கள். ஆனால் மோசமான உணவுப்பழக்கங்களும் இப்படியான பாதிப்பை ஏற்படுத்தும். உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) வேகமாக அதிகரித்து வருகிறது.
தவறுகள்
1. சோடாக்கள், இனிப்பு தேநீர், பழச்சாறுகள் இனிப்பு பானங்களை அடிக்கடி எடுத்து கொள்ளுதல்.
2. சமோசாக்கள், சிப்ஸ், பக்கோடாக்கள் போன்ற உணவு பொருட்களை அடிக்கடி வாங்கி சாப்பிடும் பொழுது தேவையில்லாத கொழுப்புக்கள் தேங்கி நிற்க வாய்ப்பு உள்ளது.
3. பிஸ்கட்கள், பேக்கரி பொருட்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை விரும்பி எடுத்து கொள்ளுதல்.
4. உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை
5. சிலர் தன்னுடைய சில காரணங்களால் தூக்கமின்மை பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். அவர்களுக்கும் இந்த நோய் வரலாம்.
6. நாள்பட்ட மன அழுத்தம் இருப்பதால் கொழுப்புக்கள் தேங்க வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |