இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நீரிழிவு நோயாக இருக்குமாம்
Diabetes
By Manchu
நீரழிவு நோய் ஒருமுறை வந்துவிட்டால், முழுமையாக ஒழிக்க முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். எனவே, நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதில் உணவு மற்றும் வாழ்கை முறை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலில் சரியான நேரத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தவில்லை என்றால் அவை இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் வரும் அபாயத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை நாம் அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.
- சருமத்தில் கரும்புள்ளிகள் அல்லது சருமம் கருமையாக மாறுவது நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதன் போது, முழங்கைகள், முழங்கால்கள், கழுத்து மற்றும் அக்குள் போன்ற இடங்களில் ஒரு தொனி கருமை அல்லது கருமையான திட்டுகள் உருவாகத் தொடங்கும்.
- உடல் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தால், அது சர்க்கரை நோய்க்கான எச்சரிக்கை மணியாகும். இது கோடை மற்றும் ஈரப்பதமான காலநிலையில் மிகவும் பொதுவானது, ஆனால் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் கட்டாயம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
- ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகும் நீங்கள் சோர்வாக உணரும்போது, இந்த அறிகுறிகள் நீரிழிவு நோய்க்கு முந்தையதாக இருக்கலாம்.
- நீங்கள் மீண்டும் மீண்டும் தாகம் உணர்ந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தவிர, அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் நீரிழிவு நோயின் முன் அறிகுறியாகும்.
டைப்-2 நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்?
முறையான உணவு முறை, வழக்கை முறையை கடைபிடிக்காதவர்கள். முந்தைய தலைமுறையில் நீரிழிவு நோய் உடையவர்கள். குறைந்த எச்.டி.எல். உடையவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US