இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளருகிறதாம்.. உயிருக்கு ஆபத்து!
பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் மிகவும் கொடிய நோய்களில் புற்றுநோய் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்த நோய் ஏற்பட்டால் இலகுவில் குணமாக்க முடியாது மற்றும் உடலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
புற்றுநோய் என்பது எமது உடலிலிருக்கும் தேவையற்ற செல்கள் ஒன்றினைந்து வெளியேறமால் ஒரு இடத்தில் குவிந்து இருக்கும் போது ஏற்படுகிறது.
மேலும் எமது உடலில் புற்றுநோய் இருப்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம். அந்த வகையில் அறிகுறிகளை தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
புற்றுநோயின் அறிகுறிகள்
திடிரென உடல் குறைதல்
எந்தவிதமான காரணமும் இன்றி உடல் எடை குறைவடையும். இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
தேவையற்ற கட்டிகள் தோன்றல்
தேவையற்ற இடங்கள் மற்றும் மார்பகங்கள் பகுதிகளில் கட்டி போன்று தோன்றும். இந்த அறிகுறி இருந்தால் உடனே வைத்தியரை நாட வேண்டும்.
அதிகப்படியான இருமல்
காய்ச்சல் தடுமன் இது போன்ற நேரங்களை விட மற்றைய நேரங்களில் அதிகப்படியான இருமல் ஏற்படுமாயின் இது ஆபத்தை ஏற்படும் இது நுரையீரல் புற்று நோயின் அறிகுறியாகும்.
தொடர்ந்து இருமல் இருக்கும் போது சளியுடன் இரத்தம் வெளியேறும் போது இது புற்றுநோயின் ஆரம்ப நிலையை கடந்துள்ளது.
மச்சம் அல்லது மருவில் மாற்றம்
பொதுவாக மனிதர்களின் உடலில் மச்சம் மற்றும் மருக்கள் இருக்கும் இவ்வாறு இருக்கும் போது அதன் நிறத்திலோ அல்லது பருமனிலோ மாற்றங்கள் ஏற்படுமாயின் இது புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.
இரவில் நேரங்களில் அதிக வியர்வை
இரவு நேரங்களில் வழமைக்கு மாறாக வியர்க்கும் இது புற்றுநோயின் லிம்போமா என்ற வகையை சார்ந்தது. இந்த புற்றுநோய் உடலில் இருக்கும் நிணநீர் மண்டலம் மற்றும் இரத்த நாளங்கள் போன்றவற்றை தாக்குகிறது.
இது பெரியதாக பாதிப்பு இல்லையென்றாலும் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் வைத்தியரை நாடுவது சிறந்தது.