மார்பகங்கள் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் பொலிஸ்: நடுநடுங்க வைத்த சம்பவம்
டெல்லியில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் மார்பகங்கள் அறுக்கப்பட்டு கூட்டு வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெண் காவல்துறை அதிகாரியான சபியா(21) கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துடிப்புடன், நேர்மையாக பணியாற்றினார் என்றும், ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக இயங்கினார் என்றும் பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இவர் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுடன், மார்பகங்கள் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் காவலர் கூட்டு வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்று கூறப்படும் நிலையில், இச்சம்பவம் அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது.
ஒரு பெண் பொலிஸ் அதிகாரிக்கே இந்நிலை என்றால், சாதாரண பெண்ணின் நிலை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி அனைவரிடமும் எழும்பியுள்ளது.
இதுகுறித்து மஜகபொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கூறுகையில், அரசியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முன்களத்தில் நின்று நீதிக்காக குரல் எழுப்ப வேண்டும். பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
சபியாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்காக எழும் நீதியின் குரல்களில் எமது குரல் ஒங்கி ஒலிக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.