அடிக்கடி பாத எரிச்சல் வருதா? அப்போ இந்த நோய் உள்ளதாம்
சிலருக்கு பாதம் எதுவும் வேலை செய்யாமலே எரிச்சலாக இருக்கும். இந்த நேரத்தில் கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படும்.
இது நோய் அறிகுறியாக இருக்கலாம். இந்த பாத எரிச்சல் வருவதற்கான காரணம் நமது உடலின் உள்ளே ஏதாவது பாதிப்புகள் இருந்தால், அது பல வகைகளில் அறிகுறிகளாக நமக்கு காண்பிக்கும்.
இதை நீங்கள் முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுஞத்த வேண்டும். இந்த பாத எரிச்சல் வருவதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாத எரிச்சல்
பாத எரிச்சல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டால், அது நரம்புகளை பாதித்து, பாதத்தில் எரிச்சலாக வெளிப்படும்.
இந்த அறிகுறி இருந்தால் ரத்த சக்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
இது தவிர உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிப்புள்ளவர்கள், ஆர்த்ரைட்டிஸ், தொற்று பிரச்னைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், கீமோதெரபி எடுத்துக் கொள்பவர்கள்,
ஆல்கஹாலை அதிகமாக எடுத்து கொள்பவர்கள், தைராய்டு ஹார்மோனின் சுரப்பு அதிகமாக உள்ளவர்களுக்கெல்லாம் பாத எரிச்சல் வரும்.
இந்த பாத எரிச்சலை தடுக்க மீன் எண்ணெய் உதவுகிறது. தினமும் 2400 முதல் 5400 மி.கிராம் வரை மீன் எண்ணெய் எடுத்துகொள்ளலாம்.
மற்றும் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சிடார் வினிகர் சிறிது கலந்து, அதில் கால்களை ஊறவைத்து எடுத்தால் எரிச்சல் இருக்காது.
மருதாணி இலைகளை அரைத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவை பாத எரிச்சலுக்கு முற்றாக தீர்வு தராது இத தற்காலிகமாக செயற்படும் என்பது குறிப்பட தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |