புற்றுநோயை தடுக்க வேண்டுமா? அதற்கு இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க
மாதுளம் பழம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் இதில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றன.
இந்த பழத்தில் வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளன.
மற்றைய பழங்களை சாப்பிடுவதை விட மாதுளம் பழத்தை சாப்பிடும் போது உடலில் இருக்கும் பல நோய்கள் தடுக்கப்டுகின்றன. எந்தெந்த நோய்களுக்கு இது தீர்வாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மாதுளை
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாதுளையை சாப்பிட்டால் இந்த பிரச்சனை இருக்காது. இது வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை இல்லாமல் செய்து உடல் எடையை அழகாக வைத்துக்கொள்ள உதவும்.
இந்த பழத்தின் விதைகளை உண்பதால் நமது முடியின் வேர்கள் நன்றாக உறுதியாக இருக்கும். வயதாகும் காலகட்டத்தில் வரக்கூடிய மூட்டுவலி, எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு இந்த மாதுளை உதவும்.
இதில் உள்ள எலாஜிக் அமிலம், அந்தோசயினின்கள் போன்ற சேர்மங்கள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை விரட்டக்கூடிய சிறப்பு கொண்டது.
இவைகள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுத்து, அப்போப்டொசிஸை ஊக்குவிக்கின்றன. இதை தவிர சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் இது தடுக்க கூடியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |