குடல் புற்றுநோயை தெரியப்படுத்தும் அறிகுறிகள்- உங்களுக்கு இருக்கா?
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியம் அவசியமானதாகும்.
தற்போது 50 வயதிற்குட்பட்டவர்களிடம் பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த புரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகள் உதவியாக இருந்தாலும், நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களே குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான உணவுப் பழக்கத்தால் குடல் ஆரோக்கியம் நாம் நினைப்பதை விட மிகவும் மோசமாக உள்ளது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சி எடுக்காவிட்டால் அது நாளடைவில் குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் என்னென்ன அறிகுறிகளை காட்டும் என்பதனை தொடர்ந்து எமது பதவில் பார்க்கலாம்.
1. சிலருக்கு அடிக்கடி வயிறு நிறைய சாப்பிட்டால் வயிற்று உப்புசம் ஏற்பட்டு வயிறு வீங்கியது போன்று காணப்படும். இது போன்ற அறிகுறிகள் பருப்பு வகைகள், பயறு வகைகள் சாப்பிட்டால் உப்புசம் பிரச்சினை இருக்கும். இந்த பிரச்சினை தொடர்ச்சியாக இருந்தால் மருத்துவரை பார்ப்பது நல்லது.
2. ஒருவருக்கு மலம் கழிப்பது கடினமாக இருந்தால் அதுவும் குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருப்பதை உணர்த்தும் அறிகுறியாகும். இந்த பிரச்சினை இருந்தால் ஆரம்பத்திலேயே சரிச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
3. குடல் ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. குடல் ஆரோக்கியம் சீராக இல்லாவிட்டால் முடக்குவாதம், கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் விளைவாக உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |