இந்த நாடுகளில் 7 பேரில் ஒருவர் மில்லியனர் இருப்பார்களாம்.. ரகசியம் என்ன தெரியுமா?
சுவிட்சர்லாந்தில் உள்ளவர் பெரியவர்களில் 7 பேரில் ஒருவர் மில்லியனராக இருப்பாராம்.
இந்த நாடு அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமாக மில்லியனர்கள் வாழ்கிறார்கள்.
அப்படி அவர்களிடம் சொத்துக்கள் இருப்பதற்கான ரகசியம் என்ன? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ரகசியம்
1. சுவிஸில் வாழும் மில்லியனர்கள் வெவ்வேறு வங்கிகளில் இருக்கும் சலுகைகளை தெரிந்து கொண்டு அதன்படி தங்களின் முதலீடுகளை செய்வார்கள். உதாரணமாக, ஒரு வங்கி ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு சிறந்த விகிதங்களை வழங்குகிறார்கள் என்றால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சேவையை பெறுவார்கள்.
2. டிசைனர் லோகோக்கள் அல்லது கவர்ச்சிகரமான கார்கள் வாங்குவதில் ஸ்விஸ் மில்லியனர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எப்போதும் சகஜமான வாழ்க்கை முறையை தான் வாழ்வார்கள். இந்த ஒழுக்கமான அணுகுமுறை காலப்போக்கில் அவர்களின் செல்வத்தை வளர வைக்கும்.
3. சுவிஸ் முதலீட்டாளர்கள் எல்லைகளுக்கு அப்பால் சிந்திப்பவர்களாக இரப்பார்கள். இந்த நாட்டில் வாழும் பலர் இரண்டாவது கடவுச்சீட்டு அல்லது பிற நாடுகளில் வசிப்பிடங்களை வைத்திருக்கிறார்கள். இதனால் வரி மற்றும் நிதி வாய்ப்புகளை பயன்படுத்தி அவர்களின் நிதி பாதுகாப்பு உறுதிச் செய்துக் கொள்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |