அந்தரத்தில் இருந்து கீழே விழுந்த ராட்சத ராட்டினம் - 50 பேரின் நிலை என்ன? பகீர் காட்சி!
ராட்சத ராட்டினம் ஒன்று 50 பேருடன் அந்தரத்தில் இருந்து தரையில் வேகமாக விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கண்காட்சியில், சுமார் 50 பேருடன் சுற்றிக்கொண்டிருந்த ராட்சத ராட்டினம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சக்கரம் போன்ற ராட்டினம், செங்குத்தான அச்சில் சுழன்றுகொண்டு உயரத்திற்கு சென்றது. பின்னர் கீழே வரும்போது திடீரென ராட்டினம் கட்டுப்பாடு இன்றி உடைந்தது.
அச்சில் இருந்து வேகமாக கீழே வந்த ராட்டினம் தரையில் பயங்கரமாக மோதியது. இதனால் ராட்டினத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், பதைபதைக்கும் இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Punjab | Swing ride fell down from a height of around 50 to 60 feet, at least 15 people injured.#Punjab #Mohali #VibesofIndia pic.twitter.com/POtyxOATWw
— Vibes of India (@vibesofindia_) September 5, 2022