நீந்திக்கொண்டிருந்த நபரை இழுத்துச் சென்ற சுறா: 60 ஆண்டுகளுக்கு பின்பு அரங்கேறிய கோர சம்பவம்
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ள கடற்கரையில், நீந்திக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சுறா ஒன்று தாக்கியுள்ள காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் அமைந்துள்ள லிட்டில் பே கடற்கரை (Little Bay beach) என்ற கடற்கரையில் நபர் ஒருவர் நீந்திக்கொண்டுள்ளார்.
திடீரென நீந்திக்கொண்டிருந்த நபரை சுறா ஒன்று தாக்கி கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ள காட்சி வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு பின்பு மக்கள் அனுமதிக்கப்படாமல் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் மக்களையும் வெளியேற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ததில் நபரை தாக்கியது 9.8 அடி நீளமுள்ள வெள்ளை நிற சுறாவாக இருக்கலாம் என்று சுறா உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1963-ம் ஆண்டுக்கு பிறகு சிட்னியில் நடந்த முதல் அபாயகரமான சுறா தாக்குதல் இதுவாகும். சுறாவால் உள்ளே இழுத்துச் சென்ற நபரின் சில உடல் பாகங்களும், அவரது உடைகளும் மட்டுமே கிடைத்துள்ளது என்று கூறப்படுகின்றது.
ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் முர்ரே ரோஸ் மலபார் மேஜிக் ஓஷன் நீச்சல் போட்டியில் ஆயிரக்கணக்கான நீச்சல் வீரர்கள் கலந்து கொள்வார்கள். குறித்த நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு சில தினம் உள்ள நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நிலைமையை தொடர்ந்து ட்ரோன் மூலம் கண்காணித்து வருவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ள நிலையில், போட்டி ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் மார்ச் 6ஆம் தேதி போட்டி நடைபெறும் என்று கூறியுள்ளனர்.
காணொளியினை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24