குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஸ்வீட் சாண்ட்விச்... ருசியாக செய்வது எப்படி?
சாண்ட்விச் என்றால் குழந்தைகள் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு டிஷ். அப்படியான சாண்ட்விச்சை சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்....
தேவையான பொருட்கள்
பிளம்ஸ் – 6 -7
பேரீட்சை – 2-3
துத்தி ஃப்ரூட்டி – 1 டீஸ்பூன்
பிரட் துண்டுகள் – 2
திராட்சை – 5-6
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
பாதாம் – 10-12
முந்திரி 10-12
செய்முறை
முதலில் பிளம்ஸை உரித்து விதைகளை அகற்றி வெட்டவும். அதன் பிறகு பேரீச்சையின் விதைகளை அகற்றவும்.
தொடர்ந்து பிளம்ஸ் மற்றும் பேரீச்சையை பிளெண்டரில் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்து அதை தனியாக ஒதுக்கி வைக்கவும். இதன் பின்னர், பாதாம் மற்றும் முந்திரியை நறுக்கவும்.
இவற்றை திராட்சை மற்றும் துத்தி பழங்களை கலக்கவும். இப்போது ஒரு பிரட் துண்டுயை எடுத்து இரண்டு துண்டுகளிலும் பிளம் பேஸ்ட்டை தடவவும். அதன் பிறகு தேங்காய் துருவலை இரண்டு துண்டுகளிலும் தெளிக்கவும்.
திராட்சை, பாதாம் மற்றும் முந்திரி கலவையுடன் துண்டுகளை அடுக்கி, இரண்டாவது பிரட் துண்டுடன் மூடி வைக்கவும். இப்போது பிரட் கட்டர் மூலம் அவற்றை வெட்டி பரிமாறி ருசிக்கவும்.
இந்த சாண்ட்விச் நாம் பாதாம் மற்றும் முந்திரியை சேர்ப்பது நல்லது, ஏனெனில் அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளதன.