அடேங்கப்பா.. தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மை இருக்கா? அறிவோம்
சாத்துக்குடி பழம் சாத்துக்குடி இனிப்பு சுவையுடைய சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். வெப்பம் நிறைந்த பகுதிகளில் குளிர்ச்சி தரும் பழமாக சாத்துக்குடி விளங்குகிறது. இதனை ஆங்கிலத்தில் “ஸ்வீட் லெமன்” என்று அழைக்கப்படுகிறது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அருந்தும் அற்புதமான ஜூஸ் இது.
6 மாதம் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். சாத்துக்குடிப் பழத்தில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி 1 ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் அதிகளவில் கனிமங்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துளோடு இனிப்பு, புளிப்பு, கசப்பு என 3 சுவைகளை கொண்டுள்ளது.
தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் -
புற்றுநோய்க்கு
சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால், சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை தடுக்கும். மேலும், சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
இருதய ஆரோக்கியத்திற்கு
சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால், நம் உடலில் ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்ததை சுத்தமாக்கும். இருதயத்திற்கு நல்ல வலிமையோடு வைத்திருக்க உதவி செய்யும்.
கருப்பை நோய்க்கு
சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலைப்படுத்தும். மேலும், செரிமான பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வரும். வாயு பிரச்சனைகளை நிறுத்தும்.
மூட்டுவலிக்கு
சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால், மூட்டுவலி, கீல்வாதம் நோயாளிகளின் உடலில் யூரிக் அமிலங்களின் திரட்சியைக் குறைக்கும்.
கல்லீரலுக்கு
சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதற்கு சாத்துக்குடி பழம் பெரிதும் உதவுகின்றது. மேலும் கல்லீரல் சீராக செயல்பட உதவி செய்யும்.
புத்துணர்ச்சிக்கு
சாத்துக்குடி ஜூஸ் தினமும் கோடைக்காலத்தில் குடித்து வந்தால், தாகம் தணிந்து உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
ரத்தசோகைக்கு
சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ரத்தசோகை குணமாகும்.