அம்மா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சுவாசிகா... கண்கலங்க வைத்த தருணம்!
இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'நூறு சாமி' திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சுவாசிகா, தனது இயல்பான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
ஒரு தாயின் வாழ்க்கை, தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் மறுமணம் தொடர்பான நிஜச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், தாய்மையைப் போற்றும் வகையில் ஐபிசி தமிழ் பிரம்மாண்டமாக நடத்திய Mothers Of India Awards 2026 விழாவில், நடிகை சுவாசிகாவும் அவரது தாயாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மேடையை அலங்கரித்தனர்.இந்த நிகழ்வு பலரையும் நெகிழச் செய்த உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.
அம்மாவாகப் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விருது விழாவில், நடிகை சுவாசிகாவின் தாயாருக்கு Mothers Of India விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விழா மேடையில் தனது அம்மா குறித்து நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் நடிகை சுவாசிகா பகிர்ந்த மனம் தொட்ட உரையின் முழு காணொளியை இங்கே காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |