3 நாட்கள் சரிவுக்குப் பின் தங்க விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம் இதோ!
இன்றைய (செப்டம்பர் 25) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவை பதிவு செய்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வந்த 22 காரட் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
அதன்படி, இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.14,010 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.1,12,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று, 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.11,780 ஆகவும், ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து ரூ.94,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |