கணவரின் நினைவோடு வாழும் நடிகை - மறுமணம் குறித்து ஓபன் டாக்!
திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே கணவரை இழந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, இன்றும் அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நிலையில், தனது மறுமணம் குறித்த அவரது சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா
சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, சன்டிவியின் வெற்றிகரமான தொடரான “நாதஸ்வரம்” மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

அதனை தொடர்ந்து “வாணி ராணி”, “கல்யாண பரிசு”, “பாரதி கண்ணம்மா” உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
நடிப்பில் தொடர்ந்து பயணித்து வந்த ஸ்ருதி, தனது நீண்ட நாள் காதலரான பாடி பில்டர் அரவிந்த் சேகரை 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், திருமண வாழ்க்கை மலர்ந்த சில மாதங்களிலேயே அரவிந்த் சேகர் திடீரென உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கணவரின் மறைவுக்குப் பிறகும் அவரது நினைவுகளை சுமந்து வாழ்ந்து வரும் ஸ்ருதி, “அவர் என்னைவிட்டு பிரிந்துவிடவில்லை.இன்றும் என்னுடன் இருக்கிறார். அவருடன் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன்” என்று தனது கணவர் குறித்த உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து வருகிறார்.

மறுமணம் குறித்து ஓபன் டாக்
மறுமணம் குறித்து பேசிய அவர், “சமூகத்தின் கட்டுப்பாடுகள் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்காது. தனியாக வாழ்வதா அல்லது மீண்டும் திருமணம் செய்துகொள்வதா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எதிர்காலத்தில் என் வாழ்க்கையில் வேறு ஒருவர் வந்தாலும், அவரை எனக்கு அனுப்பி வைப்பது என் பாதுகாவலர் தேவதையாக இருக்கும் என் கணவர் அரவிந்த்தான் என்று நம்புவேன்” என அவர் கூறியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |