'சந்திரமுகி' படத்தில் வடிவேலுவின் மனைவியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
'சந்திரமுகி' படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த ஸ்வர்ணா மேத்யூ, தனது சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
தமிழ் சினமாவில் பல திரைப்படங்கள் மனதை கவரும் வகையில் இருக்கும். இதில் நடிக்கும் சில கதாபாத்திரங்களை நம்மால் மறக்க முடியாதபடி மனதில் பதித்திருப்போம்.
அப்படி தான் இன்றும் என்றும் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒரு படம் சந்திரமுகி. இந்த படத்தில் நடித்த சிறிய கதாபாத்திரத்தை குழந்தையிடம் கேட்டாலே சொல்லும். இதில் வரும் நகைச்சுவை காட்சிகள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு , அவை இன்னும் ரசிகர்களால் கவரப்பட்டு வருகின்றன.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் 800 நாட்கள் ஓடியது. ரஜினிகாந்தின் படத்தில் இது முக்கிய படமாக பார்க்கப்பட்டு வருகின்றது. இதில் காமெடிக்காக மக்கள் மனம் கவர்ந்தவர் தான் வடிவேலுவின் மனைவியாக நடித்த ஸ்வர்ணா மேத்யூ.
ஸ்வர்ணா மேத்யூ மற்றும் ரஜினிகாந்தின் காட்சிகள் மக்களை பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |